50 வயதிலும் கள்ளக் காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவன்.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கொடூரம்.

Published : Sep 08, 2022, 07:40 PM IST
50 வயதிலும் கள்ளக் காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவன்.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி கொடூரம்.

சுருக்கம்

கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கொதிக்கும் எண்ணெய் கணவன் மீது ஊற்றி மனைவி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கொதிக்கும் எண்ணெய் கணவன் மீது ஊற்றி மனைவி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான காயங்களுடன் கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. கணவனோ, மனைவியோ குடும்ப உறவில் இருந்து விலகி மூன்றாவது ஒரு உறவை ஏற்படுத்தும் போது குடும்பத்தில் பல பூகம்பங்கள் வெடிக்கிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத சிலர் கொலை அல்லது தற்கொலைக்கு துணிகின்றனர். இங்கே மனைவி உயிருடன் இருக்கும்போது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நிலைகள் மனைவி  கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தண்டனை கொடுத்துள்ளார்.

முழு விவரம் பின்வருமாறு தெலுங்கானா மாநிலம்  விஜயவாடாவில் சேர்ந்தவர்  கிரிதர் (50)  இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். கிரிதர் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எவ்வளவோ உழைத்தும் விஜயவாடாவில் போதிய வருமானம் இல்லாததால் பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காக குடிமல்காபூர் பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர் கிரிதர், அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், இங்கு வேறோரு பெண்ணுடன் கிரிதருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதை அறிந்த மனைவி ரேணுபா கிரிதருடன் சண்டைப் போட்டு வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து தரியாபாக் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆனாலும் கிரிதர் அந்த பெண்ணுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்துள்ளார். இதனை மனைவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இருப்பதாக தெரிந்தது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார் இந்நிலையில் கிரிதர் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு வந்து காலை 11 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் .

அப்போது கள்ளக்காதலியை சந்தித்து விட்டுத்தான் கணவர் வந்திருக்கிறார் என கருதிய மனைவி உறங்கிக் கொண்டிருந்த கிரிதர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றினார். இதில் பலத்த காயமடைந்த கிரிதர் வெப்பம் தாங்க முடியாமல் அலறினார், பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரிதரை மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!