சக்தி பள்ளி ரவிக்குமார், சாந்தி செல்போனை ஆராய்ந்தால் உண்மை தெரிந்து விடும்.. அடித்து சொல்லும் ஸ்ரீமதி தாய்.

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2022, 7:24 PM IST
Highlights

என் மகள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் வெளிப்படையாக நடந்து கொள்ளாததே அது கொலை என  அப்பட்டமாக காட்டுகிறது என ஸ்ரீமதியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.

என் மகள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் வெளிப்படையாக நடந்து கொள்ளாததே அது கொலை என  அப்பட்டமாக காட்டுகிறது என ஸ்ரீமதியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.

இதுவரை எனது மகள் எங்கு விழுந்தாள் என்பதையே பள்ளி நிர்வாகம் தெளிவாக கூறவில்லை என்றும் சம்பவம் நடந்த அன்று இரவு பள்ளி தாளாளர் ரவிக்குமார் மற்றும் செயலாளர் சாந்தி யார் யாருடன் தொலைபேசியில் பேசினார்கள் என்பதை ஆராய்ந்தாலே உண்மை தெரிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டம்  நசலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார்  சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

பின்னர் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: அடுத்த அதிர்ச்சி சம்பவம் .! கோவை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிய கொடூர ஆசிரியர்

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், இதன் விளைவாக திடீரென  ஆயிரக்கணக்கானோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், பள்ளி மீது தாக்குதல் நடத்தி பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கினர். ஒருகட்டத்தில் அது கலவரமாக வெடித்தது, பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட 300க்கும் அதிகமானோரை போலீசாரால் கைது செய்துள்ளனர். மறுபுறம் பள்ளிக்கு சீல் வைக்கும் வரை போராட்டம் ஓயாது, உடலை  பெற்றுக் கொள்ள மாட்டோம் என ஸ்ரீமதியின் பெற்றோர் கூறிவந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீமதி என் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விரிவாக பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர்.  நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அவர்கள் கொடுத்துள்ள பேட்டியில் ஸ்ரீமதியின் தாய் செல்வி,  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோரின் செல்போன்களை ஆராயவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள் நன்கு படிக்கக் கூடியவள், அவளுடைய கையெழுத்தை நான் சிறு வயது முதல் இருந்து பார்த்து வருகிறேன், எப்போதும் தமிழில் அழகாக எழுதுவார்.

இதையும் படியுங்கள்: செஃபி எடுத்து திருமண நாளை கொண்டாடிய மனைவி திடீர் மாயம்.. காதலனுடன் சென்றது அம்பலம்.. கணவர் அதிர்ச்சி.!

ஆனால் தற்கொலை கடிதம் என சொல்லும் மர்ம கடிதம் என் மகள் எழுதியது அல்ல, அது அவருடைய கையெழுத்து அல்ல, அவள் எப்போதும் சிவப்பு மையால்  எழுதமாட்டாள், அதனால்தான் அந்த மர்ம கடிதத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. சாரி அம்மா... சாரி அப்பா.. என்று எழுதியுள்ளது, ஏன் சாரி தம்பி என்று சொல்லவில்லை, சாரி சாரி சந்தோஷ் என எழுதி இருக்கிறது? இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தான் இது என் மகன் எழுதிய கடிதம் இல்லை என்று எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.

இதுவரை எனது மகள் எங்கு விழுந்தார் என்பதைக்கூட அவர்கள் சரியாக காட்டவில்லை, அப்படி விழுந்த இடம் என்றால் அங்கு ரத்தம் இருக்க வேண்டும், தற்கொலை செய்து கொண்டதற்காக இதுவரை எங்களுக்கு எந்த விதமான ஆதாரத்தையும் அவர்கள் காண்பிக்கவில்லை, சிசிடிவி காட்சிகள் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் அதை காண்பிக்கவில்லை, என் மகன் மேலிருந்து விழுந்து தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அப்படி என்றால் அவர்கள்  என் மகளை கொலை செய்துவிட்டு மறைக்கிறார்கள்.

நானும் என் மகளும் கடைசியாக பேசியதை  ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று பள்ளி செயலாளர் சாந்தி கூறுகிறார்,  நான் எனது செல்போனை தருகிறேன் அதேபோல் பள்ளி தாளாளர் ரவிக்குமார் செல்போனையும், பள்ளி செயலாளர் சாந்தி அவர்களின் செல்போனையும் ஆராய்ந்தாலே இதில் உண்மை என்னவென்று தெரிந்துவிடும், சம்பவம் நடந்த 12 ஆம் தேதி இரவு என் மகளை கொலை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக அவர்கள் யார் யாரிடம் பேசினார்கள், எவ்வளவு நேரம் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதெல்லாம் தெரிந்துவிடும்.

தயவு செய்து அவர்களை விசாரியுங்கள், என் மகள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலி, காதில் அணிந்திருந்த காதணி என இதுவுமே இல்லை,என் மகளே போய் சேர்ந்து விட்டாள் அது எதற்கு எங்களுக்கு, மொத்தத்தில் பள்ளி நிர்வாகத்திடம் உண்மை இல்லை, வெளிப்படையாக நடந்திருந்தார் இந்த பிரச்சனையே வந்திருக்காது, அவர்கள் எதையோ மறைக்க மாற்றி மாற்றி  திசை திருப்புகிறார்கள். நிர்வாகம்  வெளிப்படையாக இல்லை இதுதான் எங்களுக்கு மேலும் மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!