சூட்கேசில் அடைத்து காதலி கொடூர கொலை.... கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Apr 16, 2019, 02:58 PM ISTUpdated : Apr 16, 2019, 03:00 PM IST
சூட்கேசில் அடைத்து காதலி கொடூர கொலை.... கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

தெலுங்கானாவில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொடூரமாக கொலை செய்து சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசிய காதலனை போலீசார் அதிடியாக கைது செய்துள்ளனர். 

தெலுங்கானாவில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொடூரமாக கொலை செய்து சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசிய காதலனை போலீசார் அதிடியாக கைது செய்துள்ளனர். 

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர். இந்நிலையில், லாவண்யா தனது காதலரிடம் தம்மை திருமணம் செய்து கொள்ளும் பலமுறை வற்புத்தி வந்துள்ளார். இதற்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது காதலை பெற்றோர்களிடம் லாவண்யா தெரிவித்துள்ளார். சுனிலின் குடும்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு காதலனின் பெற்றோரை சந்திக்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.

 

இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக காதலி லாவண்யாவை பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்றார். 7-ம் தேதி திரும்பி வந்துவிடுவதாக தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி 7-ம் தேதி திரும்பி வரவில்லை. மேலும் தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவ்த்தனர். 

இதனையடுத்து புகாரின் அடிப்படையில் லாவண்யா செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த பெண்ணின் காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் என்ஜினியர் லாவண்யாவை கொலை செய்ததாக குறிப்பிட்டார். அவர் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் ஐதராபாத் அருகே ஒரு கால்வாயில் லாவண்யாவின் உடலை கண்டெடுத்தனர். 
 
பின்னர் சுனிலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் கடந்த 4-ம் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர். அங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு பேருந்தில், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக சுனில் வாக்குமூலத்தில் தெரிவித்தார். ,இதனையடுத்து ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்