பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை... உடலை ஆற்றில் வீசிய கொடூரம்..!

Published : Apr 15, 2019, 02:01 PM IST
பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை... உடலை ஆற்றில் வீசிய கொடூரம்..!

சுருக்கம்

நாகையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டம் காமேஸ்வரம் பகுதியில் உள்ள ஏரியில் ஆண் சடலம் மிதப்பதை கண்ட பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீழையூர் போலீசார் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கொலையான நபர் திருப்பூண்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் இவர் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் போட்டியால் கொலை நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை செய்த நபரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் பாஜக நிர்வாகி படுகொலை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு