வெளிநாட்டில் இருந்து பக்கா ஸ்கெட்ச்... சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை கூலிப்படை ஏவி கொலை செய்த கணவர்..!

Published : May 24, 2021, 07:52 PM ISTUpdated : May 24, 2021, 07:58 PM IST
வெளிநாட்டில் இருந்து பக்கா ஸ்கெட்ச்... சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை கூலிப்படை ஏவி கொலை செய்த கணவர்..!

சுருக்கம்

பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணை திருவாரூரில் வேன் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓட்டுநர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். 

பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணை திருவாரூரில் வேன் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓட்டுநர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். 

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி(30). இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவருக்கும்  5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் வேலை செய்து வரும் விஷ்ணுபிரசாத் திருமணமானவுடன் மனைவியை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  விஷ்ணுபிரசாத் மனைவி, குழந்தையை  கிடாரங்கொண்டானுக்கு அனுப்பி விட்டார். 

தந்தை வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதி ஆந்தக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 21ம் தேதி  ஜெயபாரதி  பணி முடிந்து  இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஏடிஎம்முக்கு பணம் நிரப்பும் வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜெயபாரதி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்;- வெளிநாட்டிலிருந்தே விஷ்ணுபிரசாத் போன் மூலம் நண்பர்களிடம் பேசி மனைவியை வாகனம் ஏற்றி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதுதொடர்பாக வேன் உரிமையாளர் திருவாரூர் பவித்ரமாணிக்கத்தை சேர்ந்த செந்தில்(32) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்களான அரசு பஸ் டிரைவர்கள் குடவாசலை சேர்ந்த ராஜா, ஜெகன், மற்றொரு செந்தில் ஆகியோரை தேடி வருகின்றனர். ஜெயபாரதியின் சகோதரர் கார்த்தி. இவர், திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!