கோவையில் தகாத உறவில் இருந்த மனைவியை தட்டிக்கேட்ட கணவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தகாத உறவில் இருந்த மனைவியை தட்டிக்கேட்ட கணவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கூடலூர் கவுண்டம்பாளையம் - கட்டாஞ்சி மலை செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ரயிலில் பெண் பயணியின் தலையில் சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது
அப்போது அவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்றும் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள மத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், இறந்து போன சஞ்சய் சௌவுத்ரி என்பவரது மனைவி சில காலங்களாக கணவரை பிரிந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஷானி என்பவருடன் வசித்து வந்துள்ளார். சஞ்சய் சவுத்ரி தன் மனைவியை தன்னுடன் வருமாறு அவ்வப்போது வற்புறுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: பொது இடத்தில் பெண்களுக்கு கண்ட இடத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்
இதனால் கோபமடைந்த முகேஷ் ஷானி தனது நண்பர் குபேந்திரனுடன் சேர்ந்து சஞ்சய் சவுத்ரியை கொலை செய்ய திட்டமிட்டு அவரை மதுபான கடைக்கு அழைத்து சென்று மது அருந்த வைத்து சஞ்சய் சவுத்ரி முகேஷ் ஷானி கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதற்கு குபேந்திரன் உதவி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதை அடுத்து கொலை செய்த இருவரையும் 24 மணி நேரத்தில் கண்டறிந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.