கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பெண் பயணி ஒருவரின் தலையில் சிறுநீர் கழித்துள்ளார்.
அகல் தக்த் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த பெண்ணின் தலையில் டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்துவிட்டார்.
நள்ளிரவில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் டிக்கெட் பரிசோதர் தன் மீது சிறுநீர் கழித்ததும் விழித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்தப் பெண் கத்திக் கூச்சல் போட்டதும் ரயிலில் இருந்த மற்ற பயணிகளும் வந்து டிக்கெட் பரிசோதகருக்கு அடி உதை கொடுத்தனர்.
Reddmatter: உலகையே மாற்றி அமைக்கும் ரெட் மேட்டர் சூப்பர் கண்டக்டர் கண்டுபிடிப்பு!
பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் அமிர்தசரசில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். சம்பவம் நடந்தவுடன் பெண்ணின் கணவர் ராஜேஷ், ரயில்வே காவல்துறையில் புகார் கொடுத்தார். ரயில்வே காவல் அதிகாரி சஞ்சீவ்குமார் சின்ஹா உடனடியாக அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். "பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார். அவரை சார்பாக் ரயில் நிலையத்தில் கைது செய்திருக்கிறோம்" என அவர் கூறுகிறார்.
டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரிடம் நடந்திய விசாரணையில் அவர் குடிபோதையில் பயணியின் மீது சிறுநீர் கழித்தாகத் தெரியவந்துள்ளது.
Surekha Yadav: வந்தே பாரத் ரயிலில் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்