ஐந்தாவதும் பெண் குழந்தையா ? மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர கணவன் !!

Published : Apr 20, 2019, 06:31 PM IST
ஐந்தாவதும் பெண் குழந்தையா ? மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர கணவன் !!

சுருக்கம்

ஐந்தாவதாக பிறந்ததும் பெண் குழந்தை என்பதால் விரக்தியடைந்த ஒருவர் தனது 4 குழந்தைகளை அறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர  சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.  

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது அனந்த்பூர் சாஹிப். இங்கு ராகேஷ்குமார் தனது மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார் 

இவருக்கு தொடர்ந்து 4 பெண் குழந்தைகள் பிறந்ததால்  ஆண் குழந்தை வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார். இவரது மனைவி கர்ப்பமானதால் தனக்கு அடுத்து ஆண் குழந்தைதான் பிறக்கும் என  காத்திருந்தார்.

ஆனால் பிறத்ததோ மீண்டும் பெண் குழந்தை . இதனால் ராகேஷ் மிகுந்த விரக்தியுடன் இருந்தார். இந்நிலையில் ராகேஷ் தனது குழந்தைகளையுட் அறை ஒன்றில் அடைத்து வைத்துவிட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

இதையடுத்து அவரும் ம தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மனைவியைக் கொல்லும்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து கதவை உடைத்த ராகேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது. தற்போது அந்த குழந்தைகள் என்ன நடந்தது  என்பதை அறியாமல் உள்ளனர்.

ஆண் குழந்தை பிறக்காததை மையமாக கொண்ட குடும்ப வன்முறைகள் நடப்பது பஞ்சாப்பில் புதியதல்ல என்கின்றனர் போலீசார்.

இந்த சம்பவம் மிகவும் மோசமானது. தங்களது தாயை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் எங்களை அப்பாவித்தனமாக பார்த்தன. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..