கடலுக்குள் காதல் ஜோடியின் உல்லாச வீடு... ஆடம்பரத்தால் மரண தண்டனை... அதிர வைக்கும் வீடியோ..!

Published : Apr 20, 2019, 12:22 PM ISTUpdated : Apr 20, 2019, 12:23 PM IST
கடலுக்குள் காதல் ஜோடியின் உல்லாச வீடு... ஆடம்பரத்தால் மரண தண்டனை... அதிர வைக்கும் வீடியோ..!

சுருக்கம்

தாய்லாந்தில் கடலுக்குள் சொகுது வீடு கட்டிய அமெரிக்க காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் கடலுக்குள் சொகுது வீடு கட்டிய அமெரிக்க காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி மற்றும் சுப்ரானே தெப்பெட் இருவரும் பிட் காயினில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளனர். கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர்.

இந்த வீட்டை வீடியோவாக எடுத்து அவர்கள் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 16ம் தேதி பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர். இந்த வீடியோ வைரலானதால்  தாய்லாந்து கடற்பட்ரையினரின் கவனத்திற்கு சென்றது. 

புக்கட் கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஆனால், உரிய அனுமதியை பெறாமல் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற சாட் எல்வர்டோஸ்கி மற்றும் சுப்ரானே தெப்பெட் இருவரும் உரிய அனுமதி இன்றி இந்த வீட்டை கட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் தாய்லாந்து குடியுரிமை அலுவலகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. 

அத்தோடு கடலுக்குள் வீடு கட்டுவது இயற்கைக்கு எதிரானது என்கிற சட்டம் தாய்லாந்த்தில் உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஜோடிக்கு  தாய்லாந்து குடியுரிமை சட்டத்தின் கீழ் மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..