காதலன் உடன் கண்றாவி கோலத்தில் மனைவி... கையும் களவுமாக பிடித்த கணவன்... கல்லால் அடித்து கொலை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 5, 2022, 5:07 PM IST

கள்ளக்காதலை கண்டித்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


கள்ளக்காதலை கண்டித்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

திருமண வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு வினோத பந்தம். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை நிதானமாக கையாண்டு சமுதாயத்தில் பலர் இளம் தலைமுறையினர்க்கு முன்னோடியாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளை கூட ஊதிப் பெரிதாக்கி குடும்ப உறவையே கேலிக்கூத்தாக்கி விடுகின்றனர். 

Tap to resize

Latest Videos

அத்துடன் நிற்காமல் திருமணத்திற்கு புறம்பான உறவில் சிக்கிஅதில்  உழல்வது மட்டுமின்றி அதற்காக கணவனையே பலி கொடுக்கும் நிலைக்கும் சென்றுவிடுகின்றனர். இந்த வரிசையில் காதலனுடன் நெருக்கமாக இருந்த மனைவியை கையும் களவுமாக கணவன் பிடித்த நிலையில், மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கல்லால் அடித்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: காதலில் மண்ணைப் போட்ட கல்லூரி பேராசிரியர்.. வகுப்பறையில் நுழைந்து தூக்கிபோட்டு குத்திய மாணவன்.

முழு விவரம் பின்வருமாறு ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் பத்வேலு மண்டலம், கோட்டா செருவு  கிராமத்தைச் சேர்ந்தவர் கொடுங்கனூர்  நாராயணன். இவருக்கும் பிரகாசம் மாவட்டம் கொம ரோலு  மண்டலத்தைச் சேர்ந்த தேவ பூஷணம் என்பவரின் மனைவி உட்டி சுனிதாவுக்கும்  இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் கணவர் தேவபூஷனுக்கு தெரிந்தது. ஒரு நாள் மனைவி சுனிதா கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்தபோது தேவபூஷன் நேரடியாக பார்த்து விட்டார்.

இதையும் படியுங்கள்: யாரையும் சும்மா விடாதீங்க! தற்கொலை செய்த கோவை மாணவி வழக்கு! 9 மாதங்களுக்கு பிறகு 2 முதியவர்கள் போக்சோவில் கைது

அப்போது அவர்களை அவர் கடுமையாக எச்சரித்ததுடன், இது போன்ற செயல்களை இனி ஈடுபடக்கூடாது என கண்டித்தார். கணவர் தேவபூஷன் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பது சுனிதாவுக்கு பிடிக்கவில்லை, மேலும் தேவபூஷன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார், தனது மகிழ்ச்சிக்கு தடையாக உள்ள கணவனை கொல்ல சுனிதா முடிவு செய்தார். தனது திட்டத்தை கள்ளக்காதலன் நாராயணனிடம் கூறினார், பின்னர் இருவரும் சேர்ந்து தேவபூஷனை தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர். 

யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலை செய்ய முடிவு செய்தனர், ஒரு நாள் கள்ளக் காதலன் தேவபூஷனிடம் சென்று இனி இதுபோன்று தவறு செய்யமாட்டேன் நடந்தவற்றிக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார். பின்னர் கடைசியாக ஒரு முறை மது அருந்த தன்னுடம் வர வேண்டும் என்றும் அவர் கோரினார், பின்னர் இருவரும் திப்பனபள்ளி அருகே உள்ள எர்ரவாக்கம்  என்ற இடத்தில் மது அருந்தினர். அப்போது மது போதையில் இருந்த தேவபூஷனத்தை சுனிதாவின் கள்ளக்காதலன் நாராயணன் கல்லால் தாக்கி கொலை செய்தார்.

பின்னர் சடலத்தை அங்கேயே விட்டு தப்பிச் சென்றார், போலீசார் உடலை அடையாளம் கண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அட்லூர்  வன சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் காதலன் நாராயணன் தேவபூஷனனை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர்  திப்பனபள்ளியில் பதுங்கியிருந்த நாராயணனை போலீசார் கைது செய்தனர். மனைவி சுனிதாவும் கைது செய்யப்பட்டார். 
 

click me!