மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை.. மாடியில் தூக்கி வீசி கொன்ற பல் மருத்துவர்.. வெளியான பகீர் வீடியோ.!

Published : Aug 05, 2022, 03:03 PM ISTUpdated : Aug 05, 2022, 03:26 PM IST
 மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை.. மாடியில் தூக்கி வீசி கொன்ற பல் மருத்துவர்.. வெளியான பகீர் வீடியோ.!

சுருக்கம்

பெங்களூர், சிலிகான் நகரில் மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை வீட்டின் மேல் மாடியில் இருந்து பெற்ற தாயே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி சிசிடிவி கேராவில் பதிவாகியுள்ளது. குழந்தையை தூக்கி வீசிய பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தாய் சுஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

மன வளர்ச்சி குன்றிய தனது 5 வயது மகளான தீப்தியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்றுள்ளார் தாய் சுஷ்மா. ஆனால், விஷயமறிந்த தந்தை, அங்கும் இங்கும் தேடி, இறுதியில் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதையும் படிக்க;- எனக்கு கொல்லி வைப்பனு பார்த்தேனே.. என்ன விட்டு போயிட்டியே ராசா.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்.!

தாய் சுஷ்மா பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். குழந்தை மன வளர்ச்சி இன்றி பிறந்துவிட்டதே என்று நீண்ட நாட்கள் மன வருத்தத்தில் தாய் சுஷ்மா இருந்துள்ளார். இந்த நிலையில், சம்பங்கி ராம் நகரில் உள்ள அத்வித் குடியிருப்பின் நானகாவது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். சம்பங்கி ராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுஷ்மாவை கைது செய்தனர்.

இதையும் படிக்க;- மனைவியை பிரிந்து தனிமையில் இருந்த தந்தை.. பெற்ற மகளையே கர்ப்பமாக்கி அட்டூழியம்.. ஆண் குழந்தை பிறந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை