இடம்பெயர்ந்த இடத்தில் கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்த பெண்ணுடனான தொடர்பை விடும்படி கேட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் கிரிதர். இவரது மனைவி பெயர் ரேணுபா. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கூலி தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இவர்கள் குடும்பத்துடன் குடிமல் கபூர் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
இடம்பெயர்ந்த இடத்தில் கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்த பெண்ணுடனான தொடர்பை விடும்படி கேட்டுள்ளார். அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால் மனைவியின் வற்புறுத்தலின் படி அங்கிருந்து கடந்த 10 நாட்கள் முன்பு தரியா பாக் என் பகுதிக்கு சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ.! முகத்தில் 200 தையல்கள்.. 11 வயது சிறுவனை ஆக்ரோசமாக கடித்த பிட்புல் நாய் - அதிர்ச்சி வீடியோ !
ஆனால் கிரிதரோ அந்த பெண்ணுடனான தொடர்பை தொடர்ந்து நீட்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியே சென்றுவிட்டு வீட்டில் அசதியாக கணவர் கிரிதர் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை சந்தித்து விட்டு வந்துள்ளதாக எண்ணிய மனைவி ரேணுபா அப்போது கணவனை பழிவாங்க நினைத்துள்ளார்.
மனைவி ரேணுபா அடுப்பில் பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த எண்ணையை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த தனது கணவர் மேல் ஊற்றியுள்ளார். சூடான எண்ணெய் பட்டதும் அலறி துடித்துள்ளார் கிரிதர். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மனைவி ரேணுபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?