மகனின் எதிர்காலத்திற்கு உதவ முடியவில்லை; கணவன், மனைவி தற்கொலை

Published : Dec 18, 2022, 06:25 PM IST
மகனின் எதிர்காலத்திற்கு உதவ முடியவில்லை; கணவன், மனைவி தற்கொலை

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்த தம்பதியர் மகனின் எதிர்காலத்திற்கு எதுவும் உதவி செய்ய முடியவில்லை என்ற விரக்தியல் கணவன், மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதேஷ்வரன், கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்ட நிலையில், இருவரும் மகனுடன் வாழ்ந்து வந்தனர். குடும்பத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஓராண்டு நடைபயணம் - அண்ணாமலை அறிவிப்பு

இந்நிலையில் தம்பதியர் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தகவலின் பெயரில் வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில், தங்கள் மகனின் எதிர்காலத்திற்கு பொருளாதார ரீதியில் எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளனர்.

தேனியில் நாய்க்கு தேசிய கொடி போர்த்தி அவமரியாதை

இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தம்பதியர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மகனுக்கு உதவி செய்ய முடியாத விரக்தியில் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!