பாஜகவில் ஐக்கியமான பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!

By vinoth kumar  |  First Published Dec 17, 2022, 2:09 PM IST

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா (45). பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 


சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை (44), துரைப்பாக்கத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா (45). பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் சிடி மணியின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவருக்கு அக்கட்சியில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று வெளியே வந்த டொக்கன் ராஜா அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த டொக்கன் ராஜா துரைப்பாக்கத்தில் பதுங்கியிருப்பதாக  ரவுடிகள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த டொக்கன் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 

click me!