கோவை மாவட்டம் கீரணத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆபாச செயலி மூலம் ஓரினச்சேர்க்கை ஈடுபட முயன்ற ஐடி ஊழியர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோவை மாவட்டம் கீரணத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர். ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், வாலிபர் ஒருவருடன் தனிமையில் இருக்க விரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்.. ஃபுல் மப்பில் கணவனை துடிதுடிக்க கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி.! நடந்தது என்ன?
இதனால் அந்த வாலிபரை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் புதர் அருகே வருமாறு செல்போனில் கூறியுள்ளார். அதன்படி இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்ற போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து மற்றொரு வாலிபர் வருவதை கண்டு ஐ.டி.ஊழியர் அதிர்ச்சியடைந்தார். பிறகு தான் தெரியவந்தது வந்த வாலிபரும், இவரும் நண்பர்கள் என்பது.
இதையும் படிங்க: நீ கெட்ட கேட்டுக்கு என் பொண்ணு உனக்கு கேக்குதா.. நடுரோட்டில் இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை!
பின்னர் இருவரும் சேர்ந்து அந்த ஐ.டி ஊழியரை கடுமையாக தாக்கிவிட்டு பணத்தை கேட்டுள்ளனர். ஆனால், அவரிடம் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த இருவரும் அவரின் ஆடைகளை கழற்ற சொல்லி அதையும் செல்போனை பறித்துச் சென்றனர். ஒருவழியாக வந்து ஐ.டி ஊழியர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐ.டி ஊழியருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆபாச செயலி மூலம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.