தமிழகத்தில் போதை மருந்துகளின் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதன்மூலம் மாணவ சமுதாயம் சீரழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நிலையில், தற்போது அதை மிஞ்சும் வகையில் கஞ்சா, ஊசி மருந்துகள் என பல்வேறு விதமான போதை வஸ்துக்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருந்த போதிலும் தொடர்ந்து கஞ்சாவின் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போதை பொருள்களின் தீவிரம் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
பீகாரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் வைஷாலி நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறை ஒன்றில் மதுபான பாட்டில்கள் கொண்ட 140 பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த லால்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் பிரஜேஷ் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு..“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு
அந்த 140 பெட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அறையை மதுபான விற்பனையாளர்கள்சட்டவிரோத வகையில் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில், மதுபானங்கள் கொண்ட பெட்டிகளை பதுக்கி வைத்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு