அதிர்ச்சி செய்தி.. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணுக்கு எய்ட்ஸ்..!

Published : Sep 03, 2021, 07:14 PM IST
அதிர்ச்சி செய்தி.. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணுக்கு எய்ட்ஸ்..!

சுருக்கம்

கைது செய்யப்பட்ட இளம்பெண் கடந்த 4 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட 8 பேரும் அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

நகை, பணத்திற்காக 8 பேரை கல்யாணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பஞ்சாப் போலீசார் கைது செய்த நிலையில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் நகை, பணம் பறிப்பதற்காக 8 ஆண்டுகளை ஏமாற்றி செய்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவரிடம் போலசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- கைது செய்யப்பட்ட இளம்பெண் கடந்த 4 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட 8 பேரும் அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

 

ஒவ்வொரு முறையும் ஒருவரை திருமணம் செய்யும் போது அவரிடம் இருந்து விவகாரத்து ஊர் பஞ்சாயத்தில் பேசி முடிவு எடுக்கப்படும். இந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு திருமணம் முடிந்தவுடன் அடுத்த சில வாரத்தில் அந்த வீட்டில்  இருக்கும் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பியோடிவிடுவார். பெண் மற்றும் அவருடன் தொடர்புடைய 4 ஆண்களை கைதுசெய்துள்ளோம்.  கைது செய்யப்பட்ட பின்னர் அந்த பெண்ணை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றோம்.

 அப்போது, அந்த பெண்ணை மருத்துவர்கள் சோதித்த போது அந்த பெண்ணுக்கு பாலியல் தொற்றுநோயான எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட 8 ஆண்களையும் மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி