4 ஆண்டுகளில் 8 ஆண்களை திருமணம் செய்து இளம் பெண் உல்லாசம்.. மோசம் போய்விட்டோம் என கதறிய இளைஞர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2021, 5:46 PM IST
Highlights

திருமணம் செய்ய முயற்சித்து வந்தார். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக செய்து வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞருடன்  திருமணம் செய்ய இருந்தார். 

4 ஆண்டுகளில் 8 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்ய பெண் ஒன்பதாவதாக ஒரு திருமணம் செய்ய முயற்சித்தபோது போலீசார் தடுத்து நிறுத்து அந்தப் பெண்ணை கைது செய்தனர். அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ் (எய்ட்ஸ்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 8 ஆண்கள் பயங்கர அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் திருமணத்தைப் பற்றி நயந்து வியந்து கூறுவது உண்டு. ஆனால் காலப்போக்கில் திருமணம் என்பது  சந்தர்ப்ப வாதத்தின் சூனியமாக மாறியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது. 

திருமணம் என்ற பெயரில் தினம் தினம் நடக்கும் மோசடி சம்பவங்கள்  பன்மடங்கு பெருகி விட்டதே அதற்கு காரணமாகும்.  தற்போது அந்த வரிசையில் அரியானாவில்  கனவனை இழந்த இளம்பெண் ஒருவர் திருமணம் என்ற பெயரில் நடத்திய நாடகம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண், 11 வருடங்களுக்கு முன்பு கைடால் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதில் அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தது. சில நாட்கள் அவர்களும் இல்லற வாழ்க்கை இனிமையாகவே சென்றது. ஆனால் ஒரு நாள் வீட்டை விட்டு சென்ற கணவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. 

பல மாதங்கள் கணவனுக்காக  அந்தப் பெண் காத்திருந்தார் ஆனால் அவளது கணவர் வீடு திரும்பவே இல்லை. காத்திர்ப்பதில் பலனில்லை என்ற முடிவுக்கு அந்த பெண் வந்தால், கணவன் இல்லாததால் ஒருபுறம் வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது, மூன்று குழந்தைகளும் பசியால் வாடினர். இதனால் தனது மாமியாருடன் சேர்ந்து அந்தப் பெண் ஆண்களுக்கு வலைவிரித்து மோசடி செய்வது என்ற முடிவுக்கு வந்தாள். அதற்கு அவரது மாமியார் முழு உடந்தையாக இருந்தார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு அந்த பெண் அவர்களுடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, சில வாரங்களில் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு, அவர்களிடம் இருந்து பணம் நகை உள்ளிட்டவற்றை கறந்து கெண்டு, பின்னர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தற்கொலை செய்துகொள்வேண் என மிரட்டி ஒரு சில மாதங்களில் அவர்களிடம் இருந்து பிருந்து செல்வதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.

குறிப்பாக மனைவியை பிரிந்து வாழும் ஆண்களிடம் பழகி அவர்களிடம் மோசடியில் ஈடுபடுவது அவளது குறிக்கோளாக இருந்தது. இதுபோல அந்த பெண் கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 பேரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து பிரிந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட 3 இளைஞர்கள் அந்த பெண் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், இதற்கிடையில் அந்தப் பெண் 9வதுதாக ஒரு இளைஞரை திருமணம் செய்ய முயற்சித்து வந்தார். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக செய்து வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞருடன்  திருமணம் செய்ய இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தன் சுயநலத்திற்காக பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதை அவர் ஒப்புக்கொண்டார்.

அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, அதில் அவருக்கு எச்ஐவி (எய்ட்ஸ்) நோய்க்கான அறிகுறிகள் இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஏற்கனவே அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய ஆண்களும் தங்களுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் மூழ்கியுள்ளனர். பணத்திற்காக  திருமணம் என்ற நாடகத்தை நடத்தி இளம்பெண் 8 பேரின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!