கள்ளக்காதலியுடன் உல்லாசம்... நேரில் பார்த்த மனைவி.. அப்புறம் ஏட்டுக்கு நடுரோட்டில் நடந்த தரமான சம்பவம்.!

Published : Aug 07, 2021, 11:22 AM ISTUpdated : Aug 07, 2021, 11:23 AM IST
கள்ளக்காதலியுடன் உல்லாசம்... நேரில் பார்த்த மனைவி.. அப்புறம் ஏட்டுக்கு நடுரோட்டில் நடந்த தரமான சம்பவம்.!

சுருக்கம்

கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்த சுவப்னா ராஜேஷை கண்டித்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் தனது கள்ளக்காதலியுடனான தொடர்பை கைவிடவில்லை. இதேபோல், நேற்றும் ராஜேஷ் வீட்டுக்கு வராமல் கள்ளக்காதலி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தலைமை காவலரை அவரது காதல் மனைவி செருப்பால் சமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் 6வது பட்டாலியனில் தலைமை காவலராக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சுவப்னா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு ராஜேஷ் தனது காதல் மனவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.  இதனால், மன வேதனை அடைந்த சுவப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், ராஜேசுக்கு பொல்லோரி கூடம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ராஜேஷ் அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். தனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த சுவப்னா இது பற்றி கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் சரியாக பதிலளிக்கவில்லை. 

இதற்கிடையில் கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்த சுவப்னா ராஜேஷை கண்டித்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் தனது கள்ளக்காதலியுடனான தொடர்பை கைவிடவில்லை. இதேபோல், நேற்றும் ராஜேஷ் வீட்டுக்கு வராமல் கள்ளக்காதலி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சுவப்னா தனது கணவரும் கள்ளக்காதலி இருக்கும் வீட்டிற்கு மகளிர் சங்கத்தை சேர்ந்த சில பெண்களுடன் சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதனால், மேலும், ஆத்திரமடைந்த சுவப்னா இருவரையும் கையும், களவுமாக சுற்றி வளைத்தார். பின்னர், தனது கணவர் ராஜேஷை சுவப்னா செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், மகளில் சங்கத்தினர் உதவியுடன் ராஜேஷை போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!