100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜிலேபி பாபாவை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜிலேபி பாபாவை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் உள்ள தோஹ்னாவை சேர்ந்தவர் 63 வயதான ஜிலேபி பாபா. இவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஒரு பெண்ணை மயக்கமடைய செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தோஹானா நகர காவல்துறையினர் ஜிலேபி பாபாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்து சுமார் 120 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படிங்க: டியூசனுக்கு படிக்க வந்த 10 வயது சிறுமிக்கு ‘பாலியல்’ தொல்லை கொடுத்த 65 வயது கிழவன்.. துரத்தும் போலீஸ்
யார் இந்த ஜிலேபி பாபா?
இதை அடுத்து ஜிலேபி பாபா ஹரியானா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை ஹரியானா நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அமர்புரி என்றழைக்கப்படும் இவர் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபின் மான்சா நகரில் இருந்து தோஹானாவுக்கு வந்தார். அவரது மனைவி இறந்துவிட்டார், அவருக்கு நான்கு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவர் 13 ஆண்டுகளாக, ஒரு ஜிலேபி கடையை நடத்தி வந்தார். பின்னட் அங்கு வந்த ஒருவரிடம் இருந்து தந்திர மந்திரத்தைக் கற்றுக்கொண்ட அமர்வீர், சில வருடங்களாக தோஹானாவில் இருந்து காணாமல் போனார்.
இதையும் படிங்க: எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மகள்களிடம் பாலியல் சீண்டல்.. கள்ளக்காதலனை கொன்று ஆற்றில் வீசிய கள்ளக்காதலி..!
பின்னர் ஒரு கோயிலுடன் ஒரு வீட்டைக் கட்டத் தோஹானாவுக்கு திரும்பிய அவரை, பல பெண்கள் பின்பற்றினர். மேலும் அவரை ஜிலேபி பாபா என்றும் அழைத்தனர். இதற்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு கோவிலுக்குள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது சித்து வேலைகளை பல பெண்களிடம் காட்டி பலரை தன் வலையில் விழவைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து பல பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.