UKG சிறுமியை நாசம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. திருச்செந்தூர் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்ட அயோக்கியத்தனம்

Published : Aug 29, 2022, 02:11 PM ISTUpdated : Aug 29, 2022, 02:21 PM IST
UKG சிறுமியை  நாசம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. திருச்செந்தூர் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்ட அயோக்கியத்தனம்

சுருக்கம்

யுகேஜி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்து விட்டு திருச்செந்தூர் கோவிலில் வழிபாடு செய்ய சென்றிருந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.  

யுகேஜி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்து விட்டு திருச்செந்தூர் கோவிலில் வழிபாடு செய்ய சென்றிருந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆறு மாத குழந்தைகள் முதல் 60 வயது  மூதாட்டிகள் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். சில நேரங்களில் கால்நடைகளை கூட கொடூரர்கள் பாலியல் வன்புணர்வு செய்து வருகின்றனர். இது போன்ற குற்றங்களை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்நிலையில்தான் யுகேஜி படிக்கும் சிறுமியை தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

முழு விவரம் பின்வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கங்கா சூடாமணி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் அதில் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் தாளாளர் பிரபாவதி ஆவார், அவரின் கணவர் சேத்துப்பட்டு அருகே உலயம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார் அவரது பெயர் காமராஜ் (49), மனைவி நடத்தும் பள்ளியில் யுகேஜி படித்து வந்த சிறுமியை ஆசிரியர் காமராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: எனக்கு கிடைக்காத நீ யாருக்கு கிடைக்கக்கூடாது! செத்துப் போ! பள்ளி மாணவி நடுரோட்டி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.!

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது, சிறுமியின் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்ததை கண்ட பெற்றோர் அவரை வேலூர் சிஎம்சி  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர், பின்னர் போளூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு புகாரை பெற்று தீவிர விசாரணையை தொடங்கினர்.

பள்ளித் தாளார் பிரபாவதியின் கணவர் காமராஜ் சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது, இதுகுறித்து தகவலறிந்து எஸ்பி கார்த்திகேயன் கூடுதல் எஸ்பி ரமேஷ், கல்வித்துறை சிஇஓ தயாளன் ஆகியோர் நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் காமராஜ் திருச்செந்தூரில் உள்ள கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றது தெரியவந்தது, எனவே எஸ்பி கார்த்திகேயன் உத்தரவில் போலீசார் அவரை கைது செய்தனர்.அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கி பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். 

 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்