எனக்கு கிடைக்காத நீ யாருக்கு கிடைக்கக்கூடாது! செத்துப் போ! பள்ளி மாணவி நடுரோட்டி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.!

By vinoth kumar  |  First Published Aug 29, 2022, 11:31 AM IST

காதலை ஏற்க மறுத்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஷாரூக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 


காதலை ஏற்க மறுத்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஷாரூக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா குமாரி. இவரை இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

இதனையடுத்து, 90 சதவீத தீ காயங்களுடன் அந்த மாணவி மீட்கப்பட்டு புலோ ஜனோ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இததனையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ஷாரூக் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி உயிரிழந்த செய்தியை அறிந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. JusticeForAnkita என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!

click me!