சிவகங்கை மாவட்டத்தில் 6ம் வகுப்பு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த எஸ்.காரைக்குடி கிராமத்தில் 8ம் வகுப்பு வரை செயல்படகக் கூடிய அரசு நடுநிலைப் பள்ளில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பிரிட்டோ (வயது 53) என்பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், தலைமை ஆசிரியர் பிரிட்டோ 6ம் வகுப்பு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ந்து போன மாணவி உடனடியாக அருகில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு ஓடிச் சென்று தஞ்சமடைந்த மாணவி பள்ளியில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி கதறி அழுதுள்ளார்.
கோவை மதரீதியான உணர்வு மிக்க நகரம்; பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது - காவல்துறை விளக்கம்
மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கிராம மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து தலைமை ஆசிரியர் பிரிட்டோவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கஞ்சா விற்பனையில் பள்ளி மாணவர்கள்; கதி கலங்கி நிற்கும் பெற்றோர்
பாடம் எடுக்கும் பொழுது மாணவி பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது தவறுதலாக கைப்பட்டு மாணவியின் ஆடை சிறிது கிழிந்து விட்டதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது என்று தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் முயற்சியில் காவல் துறையினர் தலைமை ஆசிரியர் பிரிட்டோவை விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.