தங்கம் விலை எதிரொலி...திருட்டில் மும்முரம் காட்டும் கொள்ளை கும்பல்...! தமிழ் வாத்தியார் வீட்டில் 50 சவரன் அபேஸ்...!

Published : Aug 27, 2019, 05:13 PM IST
தங்கம் விலை எதிரொலி...திருட்டில் மும்முரம் காட்டும் கொள்ளை கும்பல்...!  தமிழ் வாத்தியார் வீட்டில் 50 சவரன் அபேஸ்...!

சுருக்கம்

விட்டிற்கு வந்து பார்த்தபோது விட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது மேலும் 3 கிலோ பெருமானமுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10,000 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொள்ளை போயிருந்த்து. வீட்டில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது குறித்து மீஞ்சூர் போலீசாருக்கு தமிழாசிரியர் கங்காதரன் புகார் கொடுத்தார்.  

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், நேரம் பார்த்து காத்திருந்த ஒரு கும்பல் 50 சவரன் நகைகளை ஆட்டைய போட்டுள்ள சம்பவம் மீஞ்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்  புகுந்த  கும்பல் பீரோவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3கிலோ வெள்ளி, 10, 000 ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் ராஜம்மாள் நகரில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் பாலகங்காதரன், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக பாலகங்காதரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியும் வீட்டை பூட்டிக்கொண்டு  பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் 

இன்று காலை பாலகங்காதரன் விட்டிற்கு வந்து பார்த்தபோது விட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது மேலும் 3 கிலோ பெருமானமுள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10,000 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொள்ளை போயிருந்தது. வீட்டில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது குறித்து மீஞ்சூர் போலீசாருக்கு தமிழாசிரியர் பாலகங்காதரன் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேக நிபுணர்களுடன் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்