12 வயது சிறுமியை பல மாதமாக சீரழித்த பள்ளி ஆசிரியர் .. சிறுமி கர்ப்பமான நிலையில் பெற்றோர் பரிதவிப்பு .. ஆசிரியர் தலைமறைவு ..

Published : Aug 27, 2019, 03:35 PM ISTUpdated : Aug 27, 2019, 03:38 PM IST
12 வயது  சிறுமியை பல மாதமாக சீரழித்த பள்ளி ஆசிரியர் .. சிறுமி  கர்ப்பமான நிலையில் பெற்றோர் பரிதவிப்பு .. ஆசிரியர் தலைமறைவு ..

சுருக்கம்

கேரளாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 12 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி அதனால் சிறுமி கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார் .

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி அடிக்கடி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார் . முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த சிறுமியின் பெற்றோர் , தொடர்ந்து வயிறு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .

அங்கு தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது . சிறுமியை  மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது தான் , அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது . அதை அவளின் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறிய போது அவர்கள் செய்வதறியாது திகைத்தனர் . 

பின்னர் அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர் . அப்போது தான் தனது பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு பல மாதங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்ததை சிறுமி கூறி இருக்கிறாள் .

இதுகுறித்து மலப்புரம் காவல்துறையில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் . புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரை விசாரிக்க காவல் துறை சென்றிருக்கிறது . ஆனால் அந்த ஆசிரியர் தலைமறைவு ஆகியிருக்கிறார் . இதனால் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக காவல்துறையினர்  தேடி வருகின்றனர் .

படிக்க அனுப்பிய இடத்தில மாணவியை ஆசிரியர் ஒருவர் கர்ப்பமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!