கண்ணைத் தோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து கொடூர சம்பவம்... கேரளா ஆணவக்கொலை வழக்கில் அதிரடியான திருப்பம்

By sathish kFirst Published Aug 27, 2019, 4:39 PM IST
Highlights

கேரளாவில் கொலை வழக்கு ஒன்றில் கண் தோண்டி , மர்ம உறுப்பை தாக்கிக் கொன்ற  10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது  கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம்.

கேரளாவில் கொலை வழக்கு ஒன்றில்  10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது  கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம்.

கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் பதிவு  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருமண பதிவுக்கு கூட்டு விண்ணப்பத்தை கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதற்கு நினுவின்  குடும்பத்தினர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தனர். 

இதனையடுத்து மூன்று வாகனங்களில் வந்த மர்ம கும்பல், கோட்டயத்தில்  கெவின் வீட்டை சூறையாடியது, கெவினையும் அவரது நண்பர்  அனிஷையும் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர் பின்னர் அனீஷை கடுமையாகத் தாக்கி, கொடூரமாக கொலை செய்துவிட்டு வழியில் விட்டு விட்டனர்.

இந்த நிலையில் கெவின் உடல் மே 28 அன்று கொல்லம் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் கண்டெடுக்கப் பட்டது. அவர் கொலை செய்வதற்கு முன்பாக, கம்பியாலும், மரத்தாலாக தடியாலு பலமாக தாக்கியிருக்கிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கண் தோண்டி எடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அந்தரங்க உறுப்பிலும் பலமாக தாக்கியுள்ளனர். வலிதாங்க முடியாமல் துடிதுடித்து இறந்த  கொடூரமாக கொலை செய்யப்பட்டு கெவின் உடலை சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு ஏரியில் வீசியுள்ளனர்.

கெவின் ஜோசப்  ஆணவ கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 22 ம் தேதி  இந்த 14 பேரில் 10 பேர் குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. கெவின் காதலியான நீனுவின் சகோதரர் சானு சாக்கோ,  நியாஸ் மோன், இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம்குட்டி, மனு முரளிதரன், ஷிபின் சஜாத், நிஷாத், பாசில் ஷெரிப் மற்றும் சானு ஷாஜகான் ஆகியோர் குற்றவாளிகளாக  அறிவிக்கப்பட்டனர்.  நீனுவின் தந்தை சாக்கோ ஜான் மற்றும் ரமிஸ் ஷெரீப், ஷினு ஷாஜகான், விஷ்ணு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

இந்த நிலையில் இன்று  10 குற்றவாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இரட்டை ஆயுள் தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு குற்றவாளிக்கும் ரூ .40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. . இதில் தலா ரூ .1.5 லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் .  அதேபோல,கெவின் நண்பர் அனீஷும் கடத்தப்பட்டு அவருடன் தாக்கப்பட்டார், அபராதத்திலிருந்து  அவருக்கு ரூ .1 லட்சம் வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 13, 2019 அன்று தொடங்கிய இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த வழக்கு ஒரு ஆணவக்கொலை என்று கருதப்பட்டதால், 6 மாதத்திற்குள்  இந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.

click me!