திண்டுக்கல் மாவட்டம் துமிச்சி பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் கடந்த 2020ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் துமிச்சி பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் கடந்த 2020ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கள்ளிமந்தயம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. வர மறுத்த கள்ளக்காதலி.. இறுதியில் தலைக்கேறிய காமத்தால் நடந்த பயங்கரம்.!
இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால் முருகேசனுக்கு 32 வருட சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- என் தங்கச்சியே கிண்டல் செய்து போட்டோ எடுக்குறியா.. வாலிபரை அடித்தே கொன்ற அண்ணன்.. திருச்சியில் பயங்கரம்.!