அம்மா உனக்கு பரிகார பூஜை செய்றேன்னு சொல்லிட்டு.. மந்திரவாதி என்ன நாலு மாசம் கர்ப்பமாகிட்டான்.. கதறிய சிறுமி..!

Published : Jan 31, 2023, 02:17 PM IST
அம்மா உனக்கு பரிகார பூஜை செய்றேன்னு சொல்லிட்டு.. மந்திரவாதி என்ன நாலு மாசம் கர்ப்பமாகிட்டான்.. கதறிய சிறுமி..!

சுருக்கம்

பள்ளிவிளை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன் மனைவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதாக  மந்திரவாதியை அணுகியுள்ளார். உங்கள் வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என மந்திரவாதி கூறினார். 

தாய்க்கு பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்த மேலகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் பரிகார பூஜைகள், வீடுகளில் சென்று தோஷம் நீக்க மாந்தரீகம் உள்ளிட்டவை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,  பள்ளிவிளை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன் மனைவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதாக  மந்திரவாதியை அணுகியுள்ளார். உங்கள் வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என மந்திரவாதி கூறினார். இதனால், அடிக்கடி மந்தரவாதி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். 

அப்போது, 8ம் வகுப்பு படிக்கும் தொழிலாளி மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில், திடீரென அந்த சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

 இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது மந்திரவாதி மணிகண்டன் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துது விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மந்திரவாதி மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்