வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!

By vinoth kumar  |  First Published Jan 31, 2023, 11:43 AM IST

விருதுநகர் கருப்பசாமி நகர் ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டில் விபச்சார தொழில் நடப்பதாக பாண்டிய நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த வீட்டில் நுழைந்த போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


விபச்சார வழக்கில் அதிமுக பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் கருப்பசாமி நகர் ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டில் விபச்சார தொழில் நடப்பதாக பாண்டிய நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த வீட்டில் நுழைந்த போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விபச்சார தொழில் நடப்பது உறுதியானது. மேலும், வீட்டிலிருந்த 29 வயது பெண் உட்பட சிலர் பிடிபட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்

 இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அதிமுக மகளிரணி மேற்கு மாவட்ட துணைத்தலைவி அமல்ராணி (40), அவரது கணவர் சந்திரசேகரன் (42) ஆகியோர் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க;-  குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்! ஃபாரினிலிருந்து வந்ததும் வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

இதையடுத்து சந்திரசேகரன், அமல்ராணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபசார வழக்கில் அதிமுக பெண் நிர்வாகி கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!