கதிகலங்க வைத்த கருமுட்டை விற்பனை.. மகளையே காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. வெளியான பகீர் தகவல்.!

Published : Jun 04, 2022, 09:33 AM ISTUpdated : Jun 04, 2022, 09:35 AM IST
கதிகலங்க வைத்த கருமுட்டை விற்பனை.. மகளையே காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. வெளியான பகீர் தகவல்.!

சுருக்கம்

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிறுமியின் தாய் அடிக்கடி தனியார் மருத்துதுவமனை தனது கருமுட்டையை விற்று உள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது ஆண் நண்பருடன் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார். 

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சூரம்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தன்னை தனது தாய் மற்றும் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து கருமுட்டை கொடுக்க வைத்து கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர் மற்றும் பெண் புரோக்கர் மாலதி(36) ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிறுமியின் தாய் அடிக்கடி தனியார் மருத்துதுவமனை தனது கருமுட்டையை விற்று உள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது ஆண் நண்பருடன் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் தாய்க்கும், ஈரோட்டை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர் கருமுட்டை விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சிறுமியின் தாயின் ஆண் நண்பர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். மேலும் சிறுமியின் மூலமும் கருமுட்டை விற்பனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர், புரோக்கர் மாலதி ஆகியோர் சிறுமிக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் மூலம் போலியாக பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை தயாரித்து உள்ளனர்.

பின்னர் சிறுமிக்கு அதிக வயது என்று கூறி அவர்கள் தனியார் மருத்துவமனையில் அணுகி கருமுட்டையை விற்று  வந்துள்ளனர். இதில் சிறுமிக்கு 20 ஆயிரம் ரூபாயும், புரோக்கர் மாலதிக்கு 5 ஆயிரமும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கொடுத்து உள்ளனர். இந்த பணத்தை வைத்து சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 12 வயது முதல் 16 வயது வரை 8 முறை சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விற்றது தெரிய வந்தது. 

ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லை தாங்க முடியாத சிறுமி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து நடந்தவற்றை கதறி அழுதுள்ளார். இதையடுத்து பெற்ற மகளையே பணத்துக்கு ஆசைப்பட்டு கருமுட்டை விற்க வைத்த தாய், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் ஆண் நண்பர் மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க;- "உன்னை விட உன் தங்கை செமையா இருக்கா".. மச்சினியுடனான உல்லாசத்தை கண்டித்த மனைவி படுகொலை.!

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!