மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை; காரணம் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி!!

Published : Jul 26, 2022, 05:44 PM ISTUpdated : Jul 27, 2022, 09:13 AM IST
மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை; காரணம் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி!!

சுருக்கம்

விருத்தாசலத்தில் பெற்றோர்கள் பேசாததால் மணமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருத்தாசலத்தில் பெற்றோர்கள் பேசாததால் மணமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்த கோபி. இவரது 17 வயது மகள் சிவகாமி. விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று இரவு திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க: பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.. கெத்து காட்டிய பெண் எஸ்.ஐ.,.!

இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று சிறுமியின் பிரேதத்தைக் கைப்பற்றி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவகாமி எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

இதையும் படிங்க: தந்தை பேச்சை கேட்காமல் காதல் திருமணம்! ஆத்திரத்தில் மகள்,மருமகன் ஆணவக் கொலை? 26 நாளில் முடிந்த வாழ்க்கை.!

அதில், தான் சரியாக படிக்கவில்லை எனவும், இதனால் தனது பெற்றோர்கள் பேசாததால் மன உளைச்சலில் இருந்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால் போலீசார் அவரது இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மாணவியின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!