சென்னையில் போலீசார் மீது கற்களை வீசி கொடூரமாக தாக்கிய கஞ்சா வியாபாரி! 3 பேர் கைது! முக்கிய குற்றவாளி எஸ்கேப்.!

By vinoth kumar  |  First Published Apr 21, 2024, 1:35 PM IST

சென்னை கண்ணகி நகர் பகுதியில் சுனாமி நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 64வது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி உமாபதி. இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.


சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை கண்ணகி நகர் பகுதியில் சுனாமி நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 64வது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி உமாபதி. இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்  உமாபதி அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கத்தியால் வெட்டியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: என்னுடைய ஆசைக்கு இணங்கனா போதும்! உன்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்குறேன்! மறுத்த பெண்ணை கதறவிட்ட தானு.!

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உமாபதியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல 2 போலீஸ்காரர்கள் வந்தனர். அப்போது உமாபதி திடீரென போலீசாரை தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் உமாபதி மற்றும் கஞ்சா போதையில் இருந்த அவரது நண்பர்கள் சேர்ந்து  போலீஸ்காரர்களை கற்களை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர் கண்ணிமைக்கும் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில் காயமடைந்த 2 போலீஸ்சாரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: அரசு பேருந்துக்குள் ஏறி ஓட்டுநர், நடத்துனரை இழுத்து போட்டு தாக்குதல்.. கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்!

தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரிகளான உமாபதி மற்றும் அவரது நண்பரை கண்ணகி நகர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட  பிரேம், ராகுல் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 3 பேரை கண்ணகி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான உமாபதியை போலீசார் தேடி வருகின்றனர். 

click me!