ஃபோன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி: பெண்கள் 2 பேர் கைது!

By Manikanda Prabu  |  First Published Aug 6, 2023, 3:19 PM IST

காசிமேடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்


வடசென்னை காசிமேடு பள்ளம் பகுதியில் பெண்கள் இருவர் போதைப்பொருளான கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காசிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்திரா (37)  சுதா (38), ஆகிய பெண்களின் இருப்பிடத்திற்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் இருவரும் தங்களது வீட்டில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டபெண்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா சிறு சிறு பொட்டலங்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

உ.பி.யில் நடந்த அட்டூழியம்! 2 சிறுவர்களைச் சிறுநீர் குடிக்க வைத்து, ஆசனவாயில் ஊசி போட்ட கொடுமை!

கைது செய்யப்பட்ட பெண்கள் தங்களை யாராவது தொலைபேசி வாயிலாக யாராவது தொடர்பு கொண்டால் கஞ்சாவை டோர் டெலிவரி செய்வதும், கஞ்சா விற்பனை செய்வது ஏதோ அரசால் அங்கிகரீக்கப்பட்ட விற்பனை போன்று தங்களிடம் பேசியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

click me!