என்னையே பிடிக்க வரியா! கத்தியுடன் துரத்திய கஞ்சா கும்பல்! கத்தியபடி ஓடிய காவலர்.! வைரல் வீடியோ.!

By vinoth kumar  |  First Published Aug 23, 2023, 2:07 PM IST

சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கோயில் திருவிழாவிற்கு சென்ற திருமாவளவன் என்பவரை கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.


சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் கையில் கத்தியுடன் போலீஸ்காரரை கஞ்சா போதை கும்பல் ஓட ஓட விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கோயில் திருவிழாவிற்கு சென்ற திருமாவளவன் என்பவரை கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் அவரை வெட்டிவிட்டு பணத்தை பறித்துள்ளனர். இதில், காயமடைந்த  திருமாவளவன் காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இந்நிலையில் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் சரவணன் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்.. என்ன காரணம் தெரியுமா? சிக்கிய கடிதம்..!

 அப்போது கஞ்சா போதையில் இருந்த மூன்று பேரும் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியுடன் காவல் சரவணனை ஓடஓட விரட்டினார்கள். கையில் லத்தி இருந்து அவர்களிடம் தப்பிக்க ஓடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி கஞ்சா போதையில் அட்டகாசம் செய்ததாக காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி (19), சூர்யா (20), சந்தோஷ் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. சவாரிக்கு வந்த பயணியின் விரலை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர்.. நடந்தது என்ன?

 பின்னர், அவர்களை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று பேரை செங்கல்பட்டு சிறையிலும், சிறுவர்கள் இரண்டு பேரை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். 
 

click me!