வீட்டில் தனியாக இருந்த ஊனமுற்ற பெண்.. ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக கதற கதற பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!

Published : May 20, 2022, 10:44 AM IST
வீட்டில் தனியாக இருந்த ஊனமுற்ற பெண்.. ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக கதற கதற பலாத்காரம் செய்த கொடூரர்கள்..!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம் பெண்ணுக்கு வாய் பேசமுடியாது. அத்துடன் அவர் கால் ஊனமுற்றவர் என்று தெரிகிறது. இதனால் வேலை எதுவும் செய்ய முடியாமல் அந்தபெண் வீட்டில்தான் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று வந்துள்ளனர். 

செங்கல்பட்டு அருகே ஊனமுற்ற பெண்ணை வீடுபுகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம் பெண்ணுக்கு வாய் பேசமுடியாது. அத்துடன் அவர் கால் ஊனமுற்றவர் என்று தெரிகிறது. இதனால் வேலை எதுவும் செய்ய முடியாமல் அந்தபெண் வீட்டில்தான் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றதால் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை சரியான பயன்படுத்தி அந்த வீட்டுக்குள் புகுந்த 3 இளைஞர்கள், ஊனமுற்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண்ணால் வாய்ப்பேச முடியாததால் அக்கம்பக்கத்தினரை கூட உதவிக்கு அழைக்க முடியாமல் தவித்துள்ளார். 

இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளின் ஆடைகள் கலைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், பேச முடியவில்லை என்றாலும் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்தாமூர் பகுதியை சேர்ந்த சசிகமார்(33), அஜய்(24), ராமநாதன்(20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!