நம்பி பழகிய காதலி.. நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

By Raghupati R  |  First Published May 20, 2022, 10:37 AM IST

இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிவந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, தன்னுடைய வீட்டுக்கு வரும்படி இளம்பெண்ணை இளைஞர் அழைத்துள்ளார். 


பெங்களூரு அருகே மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு அருகே, ஆனேக்கல் பகுதியில் வசித்தும் வருகிறார் இளம்பெண் ஒருவர். அவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.அதே பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

அவர்களில் ஒரு வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிவந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, தன்னுடைய வீட்டுக்கு வரும்படி இளம்பெண்ணை இளைஞர் அழைத்துள்ளார். ஆனால் காதலன் வீட்டுக்கு செல்ல இளம்பெண் மறுத்துவிட்டார். பின்னர் காதலனின் வற்புறுத்தலின் பேரில், அவரை சந்தித்து பேசுவதற்காக இளம்பெண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது, இளம்பெண்ணுக்கு அவரது காதலன் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மயக்கம் அடைந்துள்ளனர். பின்னர் இளம்பெண்ணை, அவரது காதலனும், நண்பரும் சேர்ந்து கூட்டாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அன்றைய தினம் நள்ளிரவே இளம்பெண்ணை, அவரது வீட்டுக்கு அழைத்து சென்று காதலன் விட்டுள்ளார். சம்பவம் நடந்த மறுநாள் தான் அந்த இளம்பெண்ணுக்கு தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து அந்த பெண் உடனடியாக சூர்யாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இளம்பெண்ணை கற்பழித்ததாக, அவரது காதலன் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், மகளிர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : மக்களே உஷார்.! இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. வானிலை மையம் விடுத்த அலெர்ட் !

இதையும் படிங்க : Gold Rate Today: தாறுமாறாக எகிறும் தங்க விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.?

click me!