ஆசை நாயகியின் கணவனின் தலையை துண்டித்து துடிக்க துடிக்க வெட்டிய கொடூரம்... கள்ளக்காதலன் நடத்திய வெறித்தன வேட்டை!!

Published : Aug 24, 2019, 04:29 PM IST
ஆசை நாயகியின் கணவனின் தலையை துண்டித்து துடிக்க துடிக்க வெட்டிய கொடூரம்...  கள்ளக்காதலன் நடத்திய வெறித்தன வேட்டை!!

சுருக்கம்

ரவுடி தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது. பெண்ணுக்காக நடந்த போட்டியில் ஒருவர் கை இழக்க, ரவுடி உயிரிழந்த பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்லால். சிதம்பரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே மர்மகும்ப லால் தலை சிதைத்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், பல்லடத்தைச் சேர்ந்த ரவுடி ஒத்த கை ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், ஒரத்த நாடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தது.

கொலை செய்யப்பட்ட சங்கர்லால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆசை நாயகி என்ற ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட மோதலில், சங்கர்லால் கொல்லப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

சிதம்பரம் பகுதியில் கூலிப்படையாக செயல்பட்டு வந்த சங்கர்லால், ராஜா இருவரும் ஒரே தட்டில் சாப்பிடும் அளவிற்கு பயங்கர தோஸ்த். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அருணாவை காதலித்துள்ளனர். இருவரும் அந்த பெண்ணை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அந்த பெண்ணும் இரண்டு பேரிடமும் ஒருவருக்கு ஒயினோருவரை பற்றி சொல்லாமல் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதில், கடைசியாக ஆசை நாயகியோடு ராஜா பழகியது தெரிந்ததும், தனக்காக விட்டுக்கொடுக்கும்படி கெஞ்சி கேட்டுள்ளார் ஆனால், தனது நண்பன் தொடர்ந்து ஆசை நாயகியோடு தனிமையில் ஜாலியாக இருந்துள்ளார். கடைசியாக இந்த விஷயம் சங்கர்லாலுக்கு தெரிய வரவே,  இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ராஜாவின் கையை சங்கர்லால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், திருப்பூருக்கு தப்பிச்சென்ற ராஜா, பல்லடத்தில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் ஆசைநாயகியை தனக்கு மட்டுமே சொந்தம் என அனுபவித்து வாழ்ந்து வந்த ரவுடி சங்கர்லாலிடமிருந்து பிரித்து அவளோடு வாழவேண்டும் எனயும், ஒத்த கையை வெட்டியதற்கு பழிக்குப் பழிவாங்க ராஜா திட்டமிட்டதாகவும், ரவுடி சங்கர்லாலை ஒருவாரமாக நோட்டமிட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று சங்கர்லாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் ஆசை நாயகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. 

இந்த விஷயம் தெரிந்து ஆவேசப்பட்ட ராஜா, மறுநாள் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வைத்து, சங்கர்லாலை, கூலிப்படையினருடன் சேர்ந்து வெறித்தனமாக வெட்டியும், தலையை துண்டித்தும் தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் சரண் அடைந்த கூலிப்படைக் கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பெண் ஆசையால் ஏற்பட்ட போட்டியில் இந்த கொடூர கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், இதில் சம்பந்தப்பட்ட ஆசை நாயகி என்ற பெண்ணையும் பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்