தமிழக கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பில் மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.. DGP சைலேந்திர பாபு பெருமிதம்

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 12:45 PM IST
Highlights

கருத்தரங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பீமால் என்.பட்டேல் நேபாள நாட்டின் 1,800 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியை 75 ஆயிரம் வீரர்கள் பாதுகாக்கின்றனர், ஆனால் 7,500 கிலோ மீட்டர் எல்லைப்பகுதி கொண்ட இந்திய நாட்டிற்கு 12 ஆயிரம் வீரர்கள் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பில் மீனவர்களதான் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை இணையத்தில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் 13 மாநிலங்களைச் சேர்ந்த கடலோரப் பாதுகாப்புக் குழும அதிகாரிகளும், உள்துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர். 

கருத்தரங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பீமால் என்.பட்டேல் நேபாள நாட்டின் 1,800 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியை 75 ஆயிரம் வீரர்கள் பாதுகாக்கின்றனர், ஆனால் 7,500 கிலோ மீட்டர் எல்லைப்பகுதி கொண்ட இந்திய நாட்டிற்கு 12 ஆயிரம் வீரர்கள் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கான பதில் பல தரப்பிலிருந்தும் வெளிவர, இணையதள கருத்தரங்கில் பங்கேற்றிருந்த தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு, இந்தியாவிலேயே கடலோரப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம் தமிழகம்தான் எனவும் இதற்காக தனிப் பிரிவு அமைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், சுமார் 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடலோரப் பகுதியின் பாதுகாப்பில் தமிழக மீனவர்கள்தான் கண்கள் மற்றும் காதுகள் போன்று செயல்படுவதாகவும் அவர் கூறினார். பின் பேசிய கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல், இதுபோன்ற கருத்தரங்கம் நடத்துவதற்கு முக்கிய நோக்கமே, கல்வியாளர்களின் உள்ளீடுகளை பயன்படுத்திக் கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகத்தான் என தெரிவித்தார்.

click me!