
2வது மனைவியின் மகளிடம் ஆசிரியர் தனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் மகேந்திரன் (59). இவர், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முதல் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்துவிட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மகேந்திரன் 2வது திருமணம் செய்துகொண்டார். இவரது 2வது மனைவிக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 2வது மனைவியின் மகளிடம் ஆசிரியர் தனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேந்திரன் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.