
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழி கிராமத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொத்தமங்கலம் அருகே நெல்லிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான மானசா. இவர் இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் உள்ள பல் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இன்று மதியம் 1 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பர்களுடன் விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. மான்சா இருந்த இடத்திற்கு சென்ற அவரது காதலன் ராஹில், மானசாவிடம் சென்று சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் அதிகமாகவே, மானசாவை அருகில் இருந்த அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
அறையில் இருந்து சத்தம் கேட்ட நண்பர்கள், பக்கத்து அறைக்கு சென்று பார்த்தபோது துப்பாக்கி குண்டு பட்டு மானசா உயிருக்குப்போட்டிக் கொண்டிருந்தார். அவரை மருத்துமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே மானசாவின் உயிர் பிரிந்தது. எர்ணாகுளம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானசாவின் காதலனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இதனால் கொலைக்கான காரண இதுவரை தெரியவில்லை.
முன்விரோதமே மரணத்திற்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மனசாவின் வைத்திருந்த இரண்டு இரண்டு மொபைல் போன்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.