பயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் கொடூரமாக வெட்டி படுகொலை..!

Published : Oct 17, 2020, 07:01 PM IST
பயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் கொடூரமாக வெட்டி படுகொலை..!

சுருக்கம்

மகாராஷ்ராவில் ஒரே வீட்டில் 4 சிறுவர்கள் கோடரியால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ராவில் ஒரே வீட்டில் 4 சிறுவர்கள் கோடரியால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் ராவர் தாலுகா போர்கேடா சிவார் கிராமத்தில் சேக் முஸ்தாக் என்பருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மத்திய பிரதேச மாநிலம் கார்கானை சேர்ந்த மெக்தாப் குலாப் பிலாலா என்பவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது சொந்த ஊருக்கு மனைவி, மூத்த மகனுடன் சென்றுவிட்டார்.தோட்டத்தில் உள்ள வீட்டில் அவரின் மற்ற பிள்ளைகளான சங்கீதா (13), ராகுல் (11), அனில் (8), நானி (6) ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

நேற்று அதிகாலை தோட்டத்திற்கு உரிமையாளர் சேக் முஸ்தாக் சென்றார். அப்போது சகோதர, சகோதரிகள் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ரத்த கரைபடிந்த கோடரி ஒன்றையும் கைப்பற்றினர்.

 போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுவர், சிறுமிகள் 4 பேரும் கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கழுத்தில் ஆழமான வெட்டுகாயங்கள் இருந்தன. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!