வீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..!

Published : Oct 16, 2020, 07:00 PM ISTUpdated : Oct 16, 2020, 07:09 PM IST
வீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..!

சுருக்கம்

வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மதபோதகரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மதபோதகரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி அடுத்த ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் அதே பகுதியில் உள்ள மதபோதகர் தேவசகாயம் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மதபோதகர் இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் திருப்பதி காஜல மண்டலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்பதி எஸ்பி ரமேஷ் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதியளித்ததையடுத்து கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, மதபோதகர் தேவசகாயத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்