அதிமுக முன்னாள் எம்.பி. மனைவி படுகொலை... 105 நாட்களுக்கு பிறகு மகன் கைது..!

Published : Jul 29, 2019, 03:46 PM IST
அதிமுக முன்னாள் எம்.பி. மனைவி படுகொலை... 105 நாட்களுக்கு பிறகு மகன் கைது..!

சுருக்கம்

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த மகனை 105 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த மகனை 105 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பெசன்ட் நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அ.தி.மு.க -வில் திருச்செங்கோடு தொகுதியின் எம்.பி-யாக இருந்தார். இவரின் மனைவி ரத்தினம் (63). இவர்களுக்கு பிரவீன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு மகள் திருப்பூரில் குடியிருந்து வருகிறார். ரத்தினம் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில், மகன் பிரவீன் இங்கிலாந்து படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் சென்னை வந்த இவர் தனது தாய் ரத்தினத்திடம் சொத்து கேட்டு தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏப்ரல் 14-ம் தேதி ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் ஜன்னலில் சென்று பார்த்த போது, ரத்தினம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் வெள்ளத்தில் ரத்தினம் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரவீனை தேடிவந்தனர்.

இந்நிலையில், சுமார் 105 நாட்களுக்கு பிறகு சொத்துத் தகராறில் தாயை கொலை செய்த மகன் பிரவீனை டெல்லியில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!