
மனைவியை ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நண்பனை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பாண்டியன் (45). பம்மல், நாகல்கேணியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். அதே மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருபவர் சிரஞ்சீவி (26). இருவரும் நண்பர்கள். வழக்கமாக வேலை முடிந்ததும் இரவு நேரத்தில் இவர்கள் ஒன்றாக அமர்ந்து சரக்கு அடிப்பதை வழக்கம். அதன்படி, கடந்த 10ம் தேதி இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறியதும் பாண்டியனின் மனைவியை சீரஞ்சீவி ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவங்க கிட்ட போற.. ஓயாமல் டார்ச்சர்.. பெண் செய்த பகீர் சம்பவம்.!
இதையடுத்து, அங்கிருந்து இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். இருப்பினும் பாண்டியனுக்கு ஆத்திரம் தீரவில்லை. இதனால், சிரஞ்சீவி வீட்டுக்கு பாண்டியன் சென்றுள்ளார். அங்கு, அவர் இல்லாததால் சிரஞ்சீவி மனைவியை ஆபாசமாக திட்டிவிட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக மனைவி கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, தனது நண்பர் ஹரி என்பவரை அழைத்துக்கொண்டு பாண்டியனை தேடி பைக்கில் பொழிச்சலூர் விநாயகபுரத்துக்கு சென்றனர்.
இதையும் படிங்க;- 55 வயதிலும் தீராதா கள்ளக்காதல் மோகம்.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி, மகளை உயிரோடு எரித்த கணவர்
அங்கு, வீட்டில் இருந்த பாண்டியனை வெளியே அழைத்து வந்து, தட்டிக் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, சீரஞ்சிவி மற்றும் ஹரி ஆகிய இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாண்டியனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். ஆனால், இருவரையும் ஊர் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே, படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு, குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவர்.!