முதல் காதலியும் செத்து போயிட்டா.. 2வது காதலியும் செத்து போயிட்டா.. நானும் சாகுறேன்..விபரீதத்தில் முடிந்த காதல்

Published : Mar 23, 2022, 07:27 AM IST
முதல் காதலியும் செத்து போயிட்டா.. 2வது காதலியும் செத்து போயிட்டா.. நானும் சாகுறேன்..விபரீதத்தில் முடிந்த காதல்

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிறுகுளத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த ஒரு வருடமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

முதல் காதல் :

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிறுகுளத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த ஒரு வருடமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இதை அறிந்த பிரவீன்குமாரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, செவிலியராக இருந்த சோலை மீனா என்பவர் இவரது காதல் கதையைக் கேட்டு பிரவீன்குமார் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

மலர்ந்த 2வது காதல் :

இதையடுத்து இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் பிரவீன்குமார் அடிக்கடி மருத்துவமனைக்கு சோலை மீனாவைச் சந்திக்க வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் மருத்துவமனை ஊழியர்கள் சோலை மீனாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அடுத்தநாள் காலை ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காதலியின் மரணச் செய்தியைக் கேட்ட பிரவீன்குமாரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

மேலும் தற்கொலைக்கு முன்பு அவர், “நீ இல்லாத உலகில் நான் வாழ மாட்டேன். நானும் உன்னோடு வருகிறேன். இங்கு நாம் ஒன்றாகச் சேர முடியாது. இறந்த பிறகாவது நாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம். எங்கள் முடிவுக்குத் தனியார் மருத்துவமனையின் ஊழியர்கள்தான் காரணம்” என அவரது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!