ஓவரா ஆட்டம்போட்ட பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு வளைச்சு வளைச்சு ஆப்பு.. மேலும் 340 நாட்கள் சிறை..!

By vinoth kumar  |  First Published Mar 23, 2022, 6:48 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வந்தது. 

நன்னடத்தை வீதியை மீறிய பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரபல ரவுடி படப்பை குணா

Tap to resize

Latest Videos

undefined

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வந்தது. 

என்கவுன்டர் பீதி

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகி இருந்த குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. படப்பை குணாவின் கூட்டாளிகள் அவருக்கு உதவி செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

நீதிமன்றத்தில் சரண்

இந்நிலையில், என்கவுன்டருக்கு பயந்து கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் படப்பை குணா அடைக்கப்பட்டார். இந்நிலையில், பொது அமைதியையும் பொது ஒழுங்கையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, குணாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

340 நாட்கள் சிறை

இதனிடையே, படப்பை குணா கைது செய்வதற்கு முன்பு இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் ஒரு ஆண்டு நன்னடத்தை விதியின் கீழ் குற்ற செயலில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டார். இதனால் விதிமீறல் காரணம் காட்டி கடந்த மாதம் 16ம் தேதி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டதில் விதியை மீறியதாக 340 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது படப்பை குணா மேலும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்து  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!