செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் ஜிதேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலி வேறொருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த முதல் கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திடீரென 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 4 இளம்பெண்கள்.. ஒரு நைட்டுக்கு இவ்வளவு வா?
இதனையடுத்து, கல்லூரி மருத்துவமனை முதல்வர், செங்கல்பட்டு நகர காவல்துறையினர் ஆகியோர் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொடுத்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் ஜிதேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.