ஊதாரித்தனமாக செலவு செய்த மகனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய தந்தை.. வெளியான பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Jul 5, 2022, 2:05 PM IST
Highlights

பாலசுப்ரமணியம் பங்குச்சந்தை உள்ளிட்ட  பலவழிகளில் பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார். மேலும், சொத்துக்களை விற்று ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். இதனால், தந்தை அப்புக்குட்டிக்கும் அவருக்கும் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. 

சொத்துக்களை விற்று ஊதாரித்தனமாக செலவு செய்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து முதலிபாளையம் சிட்கோ செந்தில் நகரில் பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவரது மகன் பாலசுப்பிரமணியம்(31). இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகள் முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த செந்தில் 3 ஆண்டுகளான பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில், பெற்றோர் கடந்த 28ம் தேதி அமாசாசை தினம் என்பதால் பாலசுப்பிரமணியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில்  சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;-  அடிக்கடி வெளியூர் சென்ற மகன்.. சைடு கேப்பில் மருமகளுக்கு பிராக்கெட் போட்டு உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்.!

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(27) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியானது. தந்தை அப்புக்குட்டி திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படையை அனுப்பி மகனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அப்புக்குட்டி கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- பாலசுப்ரமணியம் பங்குச்சந்தை உள்ளிட்ட  பலவழிகளில் பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார். மேலும், சொத்துக்களை விற்று ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். இதனால், தந்தை அப்புக்குட்டிக்கும் அவருக்கும் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால், ஆத்திரமடைந்த அப்புக்குட்டி கூலிப்படையை வைத்து  மகனை கொன்றுள்ளார். அப்புக்குட்டி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திக் ஆகியோரை கைது செய்துவிட்டோம் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகிறோம் என கூறினர்.

இதையும் படிங்க;-  வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப்படுகொலை.. சிதறிக் கிடந்த ரத்தம்.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்

click me!