
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கிட்னி பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன் புறநகர் பகுதியை சேர்ந்த சுமார் 49 வயது மதிக்கத்தக்க பெண் கிட்னி பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உதவியாக 13 வயது மகள் இருந்தார். கடந்த 30ம் தேதி அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிக்க;- ஒர்க் ஷாப் வேலைக்கு வந்த 22 வயது இளைஞரை மடக்கிய ஓனரின் மனைவி.. தடையாக இருந்த புருஷனை போட்டு தள்ளிய கொடூரம்.!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படுக்கையில் அந்த பெண் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்ட பழனி என்பவர் அந்த பெண்ணுக்கு பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அலறி சத்தம் போட்டிருக்கிறார். சத்தம் கேட்டு நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் தூய்மை பணியாளர் பழனி தப்பி ஓடிவிட்டார்.
இதையும் படிக்க;- மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன ஊழியர்.!
இதுதொடர்பாக ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்
தலைமறைவான பழனியை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தனது மகளுடன் அப்பெண்சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்து குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க;- ஃபுல் மப்பில் வந்து நைட்டில ஓயாத டார்ச்சர்.. வலி தாங்க முடியாததால் கணவரின் தலையில் அம்மிக்கல்லைப்போட்ட மனைவி