சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்த்(44). இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
சேலம் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்த்(44). இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு உறவினர் வீட்டுக்கு ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- நைட்டானாவே போதையில் வந்து ஒரே டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!
அப்போது, காரில் வந்த 6 பேர் கொண்ட ஆனந்தை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது சுத்து போட்டு சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி முக்கிய நிர்வாகி.. இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் கூறியுள்ளனர். கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.